சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் கொலை வழக்கில் துப்பு துலங்கியது. அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்ததைத் தொடந்து அவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளித் தோழனுடன் தான் வைத்திருந்த கள்ளக் காதலை கணவர் கண்டுபிடித்துத் தட்டிக் கேட்டதால் கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளி விட்டார் அப்பெண் என்று தெரிய வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் முருகன். 44 வயதான இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது குறுக்குத் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாடகை வீடு ஒன்றைப் பார்ப்பதற்காக காரில் போயுள்ளார்.

அப்போது அவரைப் பின் தொடர்ந்து ஒரு ஆட்டோ வந்தது. வீட்டு வளாகத்திற்குள் முருகன் நுழைந்தபோது, அந்த ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முருகனுக்கு திரையுலகத் தொடர்புகளும் நிறைய இருந்துள்ளன. எனவே திரைத்துறையில் யாருடனாவது பிரச்சினையா என்ற ரீதியில் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் ஒரு செல்போன் அழைப்பை வைத்து கொலையாளிகளை எளிதாக வளைத்துப் பிடித்தனர் போலீஸார். முருகன் கொலை செய்யப்பட்ட சற்று நேரத்தில், அவரது செல்போனுக்கு போன் ஒன்று வந்திருந்தது.

அந்த எண் யாருடையது என்று போலீஸார் விசாரித்தபோது அது முருகனின் மனைவி லோகேஸ்வரியின் எண் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது லோகேஸ்வரி உளறியுள்ளார். அவரது பேச்சு போலீஸாருக்கு சந்தேகத்தைக் கூட்டியது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் உண்மையைக் கொட்டி விட்டார்.

07-1465271270-wedding--6000 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271270 wedding 6000

காதல் திருமணம்
போலீஸாரிடம் லோகேஸ்வரி அளித்த வாக்குமூலம்: நானும், முருகனும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டோம். ஆரம்பத்தில் எங்கள் இல்வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர்.
07-1465271294-sex-600 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271294 sex 600
பள்ளித் தோழனுடன் கள்ளக்காதல்
நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்தது. இந்த நிலையில் பள்ளியில் என்னுடன் சேர்ந்து படித்த சண்முகநாதன் என்பவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

07-1465271336-women-abuse56-600 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271336 women abuse56 600

கண்டித்தார் முருகன்
எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் முருகனுக்கு தெரிந்துவிட்டது. சண்முகநாதனுடனான பழக்கத்தை கைவிட வேண்டும் என்று என்னை கண்டித்தார். எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். இதனால் முருகனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுபற்றி சண்முகநாதனிடம் தெரிவித்தேன். அவரும் எனது முடிவுக்கு உடன்பட்டார்.

07-1465271366-murder34 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271366 murder34

கொலை செய்யக் காத்திருந்தோம்
முருகனை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தோம். இந்தநிலையில் கோடம்பாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு பார்ப்பதற்காக முருகன் கூறிவிட்டு சென்றார். இதுதான் சரியான தருணம் என்று கூலிப்படையை ஏவி முருகனை கொலை செய்தோம்.

07-1465271374-murder235-600 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271374 murder235 600

கொலை செய்த பின் தெரிவித்த சண்முகநாதன்
கூலிப்படையினர் முருகனை கொலை செய்வதை சண்முகநாதன் மறைவில் இருந்து பார்த்தார். முருகன் இறந்த தகவலை எனக்கு அவர் போன் செய்து கூறினார். நானும் இது உண்மையாக இருக்குமா?, பொய்யாக இருக்குமா? என்பதை தெரிந்துகொள்ள முருகன் சொல்போனுக்கு தொடர்பு கொண்டேன்.
07-1465271437-mobile3455-600 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271437 mobile3455 600

மிஸ்ட் கால் கொடுத்து சிக்கினேன்
போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அதனால், முருகன் இறந்தது உண்மையாக இருக்கும் என்று நம்பிக்கொண்டேன். ஆனால், அவரது செல்போனில் இருந்த மிஸ்ட்கால் எண்ணை வைத்து போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

07-1465271449-arrest4-600 பள்ளித் தோழனுடன் கள்ளக் காதல்.. கண்டித்த வக்கீல்.. கூலிப்படையை வைத்து காலி செய்த மனைவி! 07 1465271449 arrest4 600

4 பேர் கைது
இதையடுத்து லோகேஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி கூலிப்படையைச் சேர்ந்த வியாசர்பாடியை சேர்ந்த சுப்பு (எ) கோலார் சுப்பு (31), முரளி (27), சுப்பிரமணி (24), ஜஸ்டின் (25) ஆகியோரில் சுப்பு, முரளி, சுப்பிரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஜஸ்டினும், கள்ளக்காதலன் சண்முகநாதனும் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

 

5696 Total Views 13 Views Today
  • 162
  •  
  •  
  •  
  •  
    162
    Shares

Comments

comments