மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரித்து காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இந்த மீன்வகை மனித உடலில் ஒட்டும் தன்மையுடையதாக காணப்படுவதனால், அது  உடலில் ஒட்டும் சந்தரப்பத்தில் உடலில் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பாசிக்குடா கடற்கரைக்கு செல்வோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஜெலிபிஸ் மிகவும் பழமையான மீனினம் ஆகும்.

சுமார் 70 கோடி வருடங்களுக்கு முன் கடலில் உருவாகியிருப்பதாக கடல்வள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3840 Total Views 13 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments