திருப்பூரை சேர்ந்த தம்பதிகள், கன்னியாகுமரி கடலில் செல்பி எடுக்க முயன்ற போது இராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் வல்லியன்காடு பகுதியை சேர்ந்த ஷெரீப்(வயது-42), அவரது மனைவி பாத்திமா பீவி(வயது-40) என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

உமர் ஷெரீப், வல்லியன்காடு பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மனைவி ஃபாத்திமா பீவி, பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கர்பிஷா துல் குப்ரா(12), ஆயிஷா சித்திக்(10) ஆகிய இருமகள்கள் உள்ளனர்.

உமர் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரியில் உள்ள தனது நண்பர் ஜாஃபர் சித்திக் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சங்குத்துறை கடற்கரைக்கு சென்ற ஷெரீப் மற்றும் அவரது மனைவியும் கடலில் நின்றுக் கொண்டு செல்பி எடுக்கக் முயற்சித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராமல் வந்த பெரிய அலை, பாத்திமாவை அடித்துச் சென்றள்ளது. அவரை காப்பாற்ற முயன்ற உமரும் அலையில் சிக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் தம்பதிகளை காப்பாற்ற முயன்று இருவரையும் வெளியே இழுத்துள்ளனர். அதில் பாத்திமா இறந்துள்ளார். உமர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இருவரது உடலையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

5178 Total Views 4 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments