இன்று என்னை தொடர்புகொண்ட நண்பர் ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் இருந்து தன் நண்பர்களுக்கு Automatic ஆக “Hi” என்ற Message செல்வதாகவும், ஆனால் அதை தான் அனுப்பவில்லை எனவும் கூறி தன் கணக்கு ஒருவேளை யாராலும் ஹாக் செய்யப்பட்டிருக்குமா என கேட்டார். இந்த பிரச்சினை அவருக்கு மட்டுமல்ல பலருக்கு ஏற்பட்டிருக்கும். அப்போ உங்கள் கணக்கு ஹக் செய்யப்பட்டுள்ளதா?

பேஸ்புக் கணக்கை ஹக் செய்வது சாத்தியமா? இலகுவானதா?

உண்மையில் அவ்வளவு இலகுவாக பேஸ்புக்கை ஹக் பண்ணமுடியாது. தற்போது பேஸ்புக் சிறிது சிறிதாக பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. Professional ஹக்கேர்ஸால் மட்டுமே ஓரளவு சாத்தியம்.

சாதாரணமாக பேஸ்புக்கை நான்கு வழிகளில் ஹக் செய்யலாம்.

 • Phishing
 • Key Logging
 • Social Engineering
 • Primary email hack

இதில் Social engineering அவ்வளவு ஆபத்தானதல்ல. மிகுதி மூன்று தொடர்பிலும் கொஞ்சம் அவதானமாக இருத்தல் அவசியம்.Phishing என்பது பேஸ்புக் போலவே ஒரு போலியான பக்கத்தை உருவாக்கி அதை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள். அதுவும் பேஸ்புக்கில் இருந்து அனுப்புவது போலவே அனுப்புவார்கள். நீங்கள், அந்த மின்னஞ்சல் பேஸ்புக்கினால் அனுப்பப்பட்டதுதான் என்று நினைத்து அதை திறந்தால் அந்த பக்கம் Original பேஸ்புக் பக்கம் போலவே இருக்கும். அதில் உங்கள் பயனர் பெயர், பாஸ்வேர்ட் போன்றவற்றை உள்ளிட்டதும் அது Phishing மின்னஞ்சலை அனுப்பியவருக்கு சென்றுவிடும். இப்போது இதில் உள்ள ஆறுதலான விடயம் என்னவென்றால் பெரும்பாலான இணைய உலவிகள் இத்தகைய Phishing தளங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. Google Chrome உலாவி இத்தகைய தளங்களுக்குள் நுழையும்போது எச்சரிக்கை செய்கின்றது.Firefox உலாவு முற்றுமுழுதாக தடை செய்துவிடுகிறது.

அடுத்து Keylogging. இது கொஞ்சம் ஆபத்தானது. நெற்கஃபே போன்ற பொது இடங்களில் பேஸ்புக்கை பாவிப்பவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். இத்தகைய இடங்களில் Key Logger மென்பொருள்களை நிறுவிவைத்திருப்பார்கள். அவை நிறுவப்பட்டிருப்பது எமக்கு தெரியாது. நாங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடும்போது அவற்றை பதிவு செய்து வைத்திருக்கும். மென்பொருளை நிறுவியவர் தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம். பொது இடங்களில் இணையத்தை பாவிக்கும்போது கீபோர்ட் கணினியுடன் இணைக்கும் Port ஐயும் ஒருமுறை அவதானியுங்கள். காரணம் இப்போது Key Logger Hardware ஆகவும் வருகிறது. கீழுள்ள படத்தை அவதானியுங்கள்
Keylogger-hardware-PS2-example-connected.jpg
Keylogger-hardware-PS2-example-connected.jpg
அடுத்து Primary email hack. நீங்கள் பேஸ்புக்கிற்கு உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரியை முதலில் ஹக் செய்வார்கள். அதன் பின்னர் பேஸ்புக்கில் உள்ள Forget Password ஆப்ஸன் மூலம் இலகுவாக ஹக்செய்துவிடுவார்கள். இதற்கு பேஸ்புக்கில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி மறைத்துவிடுங்கள்.
இதில் Key Logging மட்டுமே கொஞ்சம் ஆபத்தானது. அவதானமாக இருந்தால் ஆபத்தை குறைக்கலாம். ஏனைய வழிகள் இப்போது கடினம்.
சரி அப்படியானால் எம்மையறியாமல் எப்படி எமது நண்பர்களுக்கு “Hi” என்ற Message சென்றது என்று கேட்கிறீர்களா? அதற்கு காரணம் பேஸ்புக்கில் நீங்கள் பாவிக்கும் அப்ளிகேஷன்கள்தான். இப்போது Rockmelt என்னும் இணைய உலாவியை பெரும்பாலானவர்கள் உபயோகித்து வருகிறார்கள். இந்த இணைய உலாவியானது உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் பெயரில் உங்கள் நண்பர்களுக்கு Message அனுப்புகிறது. அடுத்து பெரும்பாலான Facebook Application கள் உங்கள் அனுமதியில்லாமலேயே உங்கள் நண்பர்களுக்கு Message அனுப்புகிறது. உங்கள் பேஸ்புக் கணக்கில் சென்று Account Setting > Apps என்ற வழியே சென்று தேவையற்ற Application களை நீக்கிவிடுங்கள்.
 Untitled-1
ஆகவெ இது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. Rockmelt உலாவி பாவிப்பதை குறைத்துக்கொண்டால் நல்லது. ஏனெனில் அந்த உலாவி சிறந்த உலாவியும் அல்ல. அதேவேளை எமது பெயரில் நண்பர்களுக்கு அடிக்கடி Message சென்றால் அவர்களை அநாவசியமாக எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்
1885 Total Views 7 Views Today
 • 51
 •  
 •  
 •  
 •  
  51
  Shares

Comments

comments