சற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள் வீச்சு!யாழ் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் மீதும் இன்று வாள் வீச்சு நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதில் படுகாயமடைந்த இருவரும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழிலிருந்து வரும் தகவல்கள் அறியப்படுகிறது எனினும் சம்பந்தப்பட்ட இருவரும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு பிரிவினர் (NIB)எனவும் அறியப்படுகிறது

இது சம்பந்தமாக NIB யின் உயரதிகாரி ஒருவரை நாம் தொடர்பு கொண்டபொழுது சம்பவமானது யாழில் கடையுடைப்பு ஒன்று இடம்பெற்றதாகவும் அதை தடுப்பதற்கு முயற்சித்த வேளை பொலிஸார் மீது வாள் வீச்சு நடாத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை யாழில் மாணவர்கள்  சுட்டுக்கொல்லப்பட்டதிற்கு பழிவாங்கும் நோக்கமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா எனவும் சந்தேகம் வலுக்கின்றது

மேலதிக விபரங்களை அறிவதற்கு உங்கள் tnnlk டன் இனைந்திருங்கள்

இரண்டாம் இனைப்பு

இந்த தாக்குதலில் நிமல் பண்டார மற்றும் பி.எஸ். நவரத்ன எனப்படும் பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த இருவரும் பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பேருடன் வந்த குழு ஒன்றின் மூலமாகவே இந்த வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

imageimageimageimageimage
image

image

136111 Total Views 18 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments