வாகனங்களை இடதுபக்கமாக முந்திச் செல்லும் குற்றத்துக்கான அபராதத் தொகையான 25,000 ரூபாயை அறவிட முன்வைத்த யோசனையை கைவிட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் .

இந்த தகவலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் அதிக வாகன நெரிசல்கள் ஏற்படுவதனால் இடது பக்கமாக முந்தி செல்வதற்கு 25,000 ரூபாயை அபராதமாக விதித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் டில்ருக் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய 6 குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாயை அபராதமாக விதிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும் சுதில் டில்ருக் கூறியுள்ளார்.

87761 Total Views 1 Views Today