வவுனியா பூனாவை இரானுவ முகாமிக்கு அருகே இன்று (27) அதிகாலை 5.00மணியளவில் ஏற்ப்பட்ட விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் 32வயதுடைய முகமட் சுது என்பவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

img_4051 img_4052 img_4053 img_4054 img_4055 img_4056 img_4057 img_4058 img_4059 img_4060 img_4061

8793 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments