வவுனியாவில் சிறிரெலோ இளைஞரணி செயலாளர் கோகுலன் வீட்டின் மீது தாக்குதல்
வவுனியா திருநாவற்குளம் பகுதியிலுள்ள சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் கட்சியின் தீவிர விசுவாசியுமான சிறி ரெலோ கோகுலனின் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவில் சிறிரெலோ கட்சியின் முன்னாள் இளைஞர் அணியின் செயலாளராக பதவி வகித்து வந்ததுடன் கடந்த தேர்தல் காலத்தின்போது சிறிரெலோ கட்சிக்காக தேர்தல் களப்பணியில் கடுமையாக உழைத்து வந்த வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்துவரும் குமாரசிங்கம் கோகுலன் என்பவரது வீட்டின் மீதே நேற்று இரவு 11மணியளவில் போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் கடந்த தேர்தல் காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர் என்ற ரீதியில் அரசியல் கால்ப்பிணர்வு காரணமாக அரசியல் பலிவாங்கலாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை இத்தாக்குதல் சம்பவமானது ஒட்டுக்குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது

இச்சம்பவம்ம தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் ஊடகம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த காலங்களில் சிறீரெலோ கட்சியின் இளைஞரணியில் தீவிரமாக செயற்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

 

img_4033

சிறீரெலொ கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் மற்றும் சிறீரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் கார்த்திக்குடன் கோகுலன் அவர்கள்

img_4065
img_4066

இவர் சிறீரெலோ கட்சியின் இளைஞரணியில் அங்கம் வகித்தார் என்பதற்குரிய ஆதாரம் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

http://www.tamilcnnlk.com/archives/310663.html

10377 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments