இன்னமும் இரண்டு நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமல்லாது கூட்டமைப்பின் பா.உ வழங்கப்பட்டுள்ள விசேட சலுகைகள் மற்றும் விசேட பதவிகள் அனைத்தையும் இராஜினாமா பன்னப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன (“ஆனால் இது எதுவரை உண்மை தன்மை என்பது புரியவில்லை..இதை மக்களாகிய நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்)

மேலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்லாட்சி என கூறப்படும் இவ் ஆட்சி அமைப்பதற்கு அரும்பாடுபட்டு உழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு தற்பொழுது அநீதியை இந்த அரசு மேற்கொண்டுள்ளதாக அறிந்ததை முன்னிட்டே இவ் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது அரசியல் கைதிகளின் விடுதலை அனைத்து தமிழர்களினதும் அரசியல் தீர்வு என்பன போன்ற பல விடயங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் நல்லாட்சி அரசு அமைப்பதற்கு தாம் எந்தவொரு நிபந்தனையுமற்ற ஆதரவை தாம் அளித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் உலக தமிழருக்கு வழங்கிய வாக்குறுதி(இந்த வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு கிடைக்கும்) நிறைவேற்றப்படாமல் போகும் பட்சத்திலேயே அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்யப்போவதாக அறியப்படுகிறது தாம் இவ்வாறு செய்யும் பட்சத்தில் நல்லாட்சி அரசு கவிழ்க்கப்படும் அரசு தமது ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் கீழ்இறங்கிவரும் எனவும் கூட்டமைப்பிற்குள் பரவலாக கதைகள் அடிபடுகிறதாம்

இதேவேளை சில அரசியல் அவதானிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருகாலமும் தமது பதவிகளை இராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் இப்பொழுது புதிதாக ரவிராஜ் அவர்களின் கொலையின் நீதிமன்ற தீர்ப்பை காட்டி அதன்மீது மக்களின் திசையை திருப்ப முயல்வார்களே தவிர ஒரு போதும் தம் பதவிகளை துறக்கமாட்டார்கள் என கூறுகின்றனர் அத்துடன் 31.12.2016ற்கு முன் தீர்வு பெற்றுத்தருவேன் என சம்பந்தர் கூறினார் இதற்கு முன்பும் 2013ல் தீர்வு இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வேளையில் ஞாபக படுத்தவேண்டியுள்ளது “பாவம் அவர்களின் நாட்காட்டியில் இன்னமும் 2013 முடியவில்லை ” எனவும் அரசியல் அவதானிகள் விசனம் தெரிவிக்கின்றனர்

எனினும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறப்பார்களா? நல்லாட்சி அரசிற்கு சவால் விடுத்து எமது தீர்வை பெற்றுத்தருவார்களா??என்பவற்றிற்கு பதில்????

 

10986 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments