கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனது விற்பனை நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட ஒரு விபத்தின்போது கால் முறிவடைந்த நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென கூறி விடுதியில் தங்கவைத்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை அவரை சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு அழைத்து செல்லாத கொடுமையான சம்பவமொன்று யாழ் வைத்திய சாலையில் இடம்பெற்று வருவதாக அவரது உறவினர்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர் .

குறித்த நபர் விற்பனை நிலையம் ஒன்றினை நடத்தி வருவதாகவும் ஒரு மாத காலமாக வைத்திய சாலையில் தங்கியிருப்பதனால் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர் .தினமும் சத்திர சிகிச்சை இன்று நடக்கும் நாளை நடக்கும் என எதிர்பாத்து எதிர்பாத்து இதுவரை எதுவும் நடந்த பாடில்லை எனவும் வைத்திய சாலையில் பணியாற்றும் சிலர் தனியார் வைத்திய சாலை ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அங்கு சென்றீர்கள் என்றால் ஒருநாளில் வேலை முடிந்திரும் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிய வருகின்றது .

எது எப்படியிருப்பினும் ஒரு சத்திர சிகிச்சைக்காக ஒருமாதம் காத்திருப்பது என்பது கொடுமையான விடயம்தான் கூடிய விரைவில் இதற்கான சரியான தீர்வை வைத்தியசாலை வட்டாரம் வழங்குமென எதிர்பார்ப்பதுடன் அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் எமது செய்தித் தளம் பெயர் விபரங்களுடம் முழுமையான செய்தியொன்றினை வெளியிடுவதுடன் தனியார் வைத்திய சாலைக்கு ஆட்சேர்க்கும் நபர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட வேண்டிய நிலை ஏற்படலாம் .

img_4341

5553 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments