புத்தாண்டு தினத்தில் இளைஞர் மீது தாக்குதல்: மூவர் கைது 
வவுனியாவில் கற்குழி பகுதியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புள்ள மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புத்தாண்டு தினத்தன்று மாலை 5மணியளவில் வவுனியா கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதி கூடிய சத்தத்துடன் சினிமாப்பாடல்களை ஒலிபரப்பு செய்து கொண்டு வீதியில் இறங்கிய சில இளைஞர்கள் நடனமாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியில் கராஜ் வைத்து தொழில்புரிந்து வரும் நாகேந்திரன் சுகிலன் வயது 22 குறித்த இளைஞன் வீதியால் சென்றபோது அவரை வழிமறித்து நடனமாடுவதற்கு அழைத்து இடையூறு ஏற்படுத்தியதுடன் சிலர் அந்த இளைஞன் மீது தாக்கவும் முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் நின்றிருந்த பெண்கள் உட்பட ஏழுபேர் கொண்ட குழுவினர் இளைஞன் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் குறித்த இளைஞனை வீட்டிற்குள் கொண்டு சென்று கத்தரிக்கோல் மூலம் உடலில் கீறி காயம் எற்படுத்தியுள்ளனர். குறித்த இளைஞனை காப்பற்றுவதற்காக சென்ற சமயமே இவ் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் வீடியோவில் பொலிஸ் அதிகாரியின் பெயரை கூறி “நான் ஷாமிளா கதைக்குரன்…உடனடியாக இங்க வா..”என்பதாக இவ் காணொளியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுபோதையில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இளைஞன் பலத்த காயத்திற்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மூன்று ஆண்களைக் கைது செய்துள்ளதாகவும் தாக்குதல் நடத்திய பெண்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று காயமடைந்த இளைஞர் ஆதங்கள் வெளியிட்டுள்ளதுடன் குறித்த பெண்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிசார் ஒருவரின் ஆலோசனைக்கு அமையவே குறித்த வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பெண்மணிக்கும் குறித்த பொலிஸ் உத்தரியோகத்தருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து எடுக்கப்பட்ட வீடியோவில் குறிப்பிடப்படும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் அவ்வாறு மேற்கொள்வில்லை தனக்கும் குறித்த பெண்ணிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது தமது மேல் அதிகாரியின் கட்டளைக்கு அமைவாகவே தன்னால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

மேலும் குறித்த வீடியோவில் வாளுகளுடன் காணப்படும் குழுவினர் பாதிக்கப்பட்ட இளைஞனின் சகோதரர்கள் என்றும் குறித்த இளைஞனை மீடபதற்காகவே அவ்விடத்திற்கு வீடியோவில் காணப்படும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் எனினும் அவர்கள் யார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் அறியப்படுகிறது எது எவ்வாறிருப்பினும் வாள் மற்றும் கூறிய ஆயுதம் வைத்திருந்தமை என்பது சட்டவிரோத குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

மேலும் அப்பகுதியில் குறிப்பிட்ட பெண் மற்றும் அவருடன் இணைந்தவர்களில் ஒரு சிலர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் இதைவைத்து மதரீதியான பிரச்சினைகளை தூண்டிவிடுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன

img-20170104-wa0000

img-20170104-wa0001

img-20170104-wa0002

7531 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments