உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல்துஷ்பிரயோகம் மூன்று பிள்ளைகளின் தந்தை கைது.

வவுனியா ஆசிகுளம் பகுதியில் (01.01.2017) அன்று 18வயதுடைய யுவதியுடன் பாலியல் துஷ்பியோகம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கடந்த 9ஆம் மாதத்திலிருந்து குறித்த யுவதியின் தாயுடன் உறவினர் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் ஆசிகுளம் பகுதியில் கடந்த 28.12.2016 அன்று வீடு ஒன்று வாடைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அப்பகுதியில் வசித்துவந்த நிலையில் குறித்த யுவதி அம்மம்மாவுடன் தங்கியிருந்து வசித்து வந்துள்ளார். எனினும் தாய் சென்று தன்னுடன் புதுவீட்டில் வந்து வசிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து 01.12.2017 அன்று குறித்த யுவதி தாயுடன் ஆசிகுளத்தில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட வீட்டில் வசிப்பதற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் உறவினர் என்ற அறிமுகத்துடன் கடந்த 9ஆம் மாதத்திலிருந்து யுவதியும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். புத்தாண்டு தினம் அன்று இரவு 7மணியளவில் குறித்த யுவதியை பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்ற பொலிசார் குறித்த வெளிநாட்டு குடும்பஸ்தர், யுவதியின் தாயார் என இருவரையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் தாயின் உடல் நிலையினைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுவித்துள்ளதாகவும் குறித்த இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

15390 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments