ஈழத்திலிருந்து புதிய ஆண்டில் புதியதொரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி அண்மையில் Assistia நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதுவரை உள்ள சமூக வலைத்தளங்களை விட அதிக சேவைகளைக் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் இது அமைந்துள்ளதுடன் மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட இந்த சமூக வலைத்தளம் பல‌ சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் பல கல்வி நிலையங்கள் மற்றும் மாணவர்களின் வரவேற்பை பெற்றுவருகின்றது.
மாணவர்கள் தமது நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்வதுடன் பாடசாலை மற்றும் ஏனைய கல்வி சார் சேவைகளை இலகுவாக பரிமாறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து வகையான ஆவணங்களும் பதிவேற்றக்கூடிய தொழில்நுட்பத்தில் அஸிஸ்ரியா நிறுவன வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர். மாணவர்கள் முகப்புத்தகத்தில் அடிமையாகி கல்வி நடவடிக்கையில் பாரிய விளைவுகளை சந்தித்து வரும் இந்த காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை நோக்காக கொண்டு இந்த இணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்
1. தமிழில் கருத்துக்களை பரிமாற்ற தமிழ் ஸ்ரிக்கர்ஸ் (Tamil Stickers) வசதி
2. சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பொதுவான கருத்து மேடை (Forum) வசதி
3. வசதிக்கேற்ப Chat பகுதியை இடமாற்றும் வசதி
4. நிறுவனக்களுக்கான உத்தியோக பூர்வ பக்கங்கள் (Pages)
5. அனைத்து வகையான கோப்புக்களையும் பதிவேற்றம், பரிமாற்றும் வசதி (Word, Excel, Powerpoint, Access, PDF, Audio,Video Files)
6. இலகுவாக கருத்துக்கணிப்புக்களை (Poll) மேற்கொள்ளும் வசதி
stucha-stickers-ad
இத்தளம் மாணவர்களுக்கு பலவகையில் பயனுடையதாக அமையும். கல்வி நிலையங்களில் இணைந்து கல்வி நடவடிக்கைகளை தொடர முன்னர் மாணவர்கள் Stucha.com சமூக வலைத்தளத்தினூடாக பாடப்பரப்பு தொடர்பான தகவல்களையும் கல்வி நிலையத்தின் குறை நிறைகளையும் ஏனைய மாணவர்களுடன் கேட்டறிந்து கொள்ள முடிவதுடன் பழைய மாணவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் கல்வி சார் குழுக்களை தாமாகவே அமைத்து செய்ற்றிட்டங்களை பரிமாற்றிக்கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஏனையவர்களுக்க்கும்  பாதுகாப்பான மற்றும் அதிவேகமான சேவையை வழங்குகின்றது, நண்பர்கள் அல்லாதவர்களுக்கும் உங்கள் கருத்துக்களை கொண்டு சேர்க்க கருத்து மேடைப்பகுதியை Stucha.com சமூக வலைத்தளம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது கருத்துமேடைப்பகுதியில் உங்கள் கருத்துக்களையும் கட்டுரைகளையும் பதிவேற்றும் போது இலகுவாக அனைத்து பாவனையாளர்களையும் சென்றடையும். ஈழத்து எழுத்தாளர்களுக்கு இத்தளமானது புதிய வலுவூட்டலை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

www.stucha.com

11493 Total Views 9 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments