விபத்தில் பலியான மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா தனது வைத்தியரான தனது சிறிய தாயாருடன் வாகனத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியிருந்தார்.

மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இம் மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

18497 Total Views 2 Views Today