இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் காவல்துறை விசாரணையின் பின்னர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

3491 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments