வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு.

வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் திரு. ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக்கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது,இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின் ஊழியர்களின் உதவியுடன் தோண்டிப்பார்த்தபோது குளாய்க்கிணறு இருப்பது தெரியவந்தது. எனினும் அதை எவரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் குளாய்க்கிணறு பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் இரண்டு வராங்களில் அந்தப்பகுதியில் குளாய்க்கிணறினை புனர்நிர்மானித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

img_4648 img_4649 img_4650 img_4651 img_4652 img_4653 img_4654 img_4655

2072 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments