வவுனியா மோட்டார் சைக்கில் விபத்தில் சிறுவன் படுகாயம்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (09) மாலை 6மணியளவில் இடம்பெற்ற பீல் பைக் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதித்தள்ளியதில் சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் 6ஆம் ஒழுங்கை பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று மாலை 6மணியளவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் 6ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்படுகையில் அதி வேகமாக வந்த பீல் பைக் பிரகாஸ் பிரிந்தன் 15வயது சிறுவன் மீது மோதியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீல் பைக்கிலில் சென்ற நபர் அதிக வேகமாக சென்ற காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து பீல் பைக் செலுத்தியவர் தலைமறைவாகி விட்டதாகவும் எனினும் அவர் செலுத்திய பீல் பைக்கின் இலக்கத்தினை வைத்து அவரை கைது செய்ய முடியும் என நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

184 Total Views 1 Views Today