வவுனியா பேரூந்து நிலையத்தில்  தமிழில்  எழுதப்பட்ட பெயர் பலகையில் பிரதாண பஸ் தரிப்பு நிலையம் என அச்சிடப்பட்டுள்ளது. இதுவரை காலமாக இதனை உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லையா..? அல்லது கண்டும் காணாதது போல் உள்ளார்களா.?
இலங்கையில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் தமிழில் பிழை இருந்தால் அதனை சுட்டிக்காட்டி அதனை திருத்தினாலும் கூட வடமாகாணத்தில் வவுனியாவில்  பெருமான்மையாக தமிழரே அதிகம்  வாழும் பிரதேசத்தில் இப்படியாக தமிழ் பிழை காணப்படுகின்றது. தமிழ் பிழை என்று சொல்வதைவிட தமிழ் கொலை என்றே சொல்லலாம் இனிமேல்  இப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா சாலை முகாமையாளரை தொடர்பு கொண்ட போது இந்த பெயர் பலகையானது இரண்டு வருடங்களாகி விட்டதெனவும் இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும்  இப் பெயர் பலகையை  நகர சபை தான் தமக்கு அமைத்து தந்ததாகவும் இதுவரை யாரும் சுட்டிக்காட்டவில்லை எனவும் தற்போது தான் நீங்கள் அறிந்தீர்களா? எனவும் கூறினார்.

வவுனியா பேருந்து நிலையத்தில் கொலை என்று போட்டதற்கு காரணம் யாவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.bustand-1 bustand-2 bustand-3 bustand-4 bustand-5

7925 Total Views 1 Views Today