தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த நிலையிலேயே இவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை,விமல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 Total Views 1 Views Today