கடந்த 08.01.2017 அன்று வவுனியா ஸ்ரேசன் வீதியில் அமைந்துள்ள வோர்ஸ் மண்டபத்தில் வவுனியாவின் ECBC மற்றும் lankabuy நிறுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வொன்று வவுனியாவில் முதன் முதலாக நடாத்தப்பட்டது

மாலை 2.30மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு சிற்றம்பலம் மற்றும் யாழ்பல்கலைகழக வவுனியா வளாகத்தின் முதல்வர் அவர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

மேலும் இந்நிகழ்வில் வவுனியாவின் பல்வேறுபட்ட துறைகளில் திறமைமிக்கவர்களை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வாகவே அமைந்திருந்தது மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிகமாக 20 நபர்கட்கு வளர்ந்துவரும் வர்த்தகர்கள் என்ற அடிப்படையிலும் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது

இதேவேளை வவுனியாவின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை உலக தமிழரின் தேசிய ஊடகமான உங்கள் “தமிழ் தேசிய செய்திகள்”(www.tnnlk.com) ன் பிரதான ஆசிரியர் திரு பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கட்கு கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

இதற்கமைய எமது ஊடகமானது ECBC மற்றும் lankabuy நிறுவனத்தினருக்கும் அதன் உரிமையாளர் திரு கிருஷ்ணகுமார் மற்றும் முகாமையாளர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

img_4566 img_4568 img_4574 img_4576 img_4577 img_4580 img_4581 img_4586 img_4603 img_4604 img_4607 img_4609 img_4610 img_4611

929 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments