வவுனியா சிந்தாமனி பிள்ளையார் கோவிலில் இன்று காலை 11மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் இவ்வார்ப்பாட்டமானது கானாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததுடன் வடமாகாண சுதேச சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம் அவர்கள் தமது உண்னாவிரத போராட்டம் அன்று சம்பந்தர் ஐயாவின் படத்தை எரித்தது பற்றி ஊடக அறிக்கை ஒன்றை கடந்த முதலாம் திகதி வெளியிட்டிருந்தார் எனவும் இதில் தம்மை விசமிகள் என குறிப்பிட்டிருந்தார் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும் எதிர்வரும் காலங்களில் தாம் தமது கானாமல் போன உறவுகளை அரசு மீட்டு தராத பட்சத்திலும் தமக்கு நீதி கிடைக்காத பட்சத்திலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவு செய்தே இவ் அடையாள ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுப்பதாகவும் தலமை தாங்கிய சிலர் தெரிவித்தனர்

இதேவேளை எமது செய்தியாளர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குகொண்ட ஒரு சிலரிடம் எந்த நோக்கத்திற்காக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபடுகிறது என்று வினாவியபோது அவர்கள் தம்மை கூட்டம் ஒன்று இருப்பதாக அழைத்ததாகவும் உண்ணாவிரதம் இருப்பது பற்றி கதைப்பதற்காகவே தம்மை இங்கு அழைத்ததாகவும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுவது தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தனர்   மேலும் அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களின் ஊடக அறிக்கை எப்பொழுது வெளியாகியது என்று கூட அறிந்திருகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது அத்துடன்  ஊடகவியலாளர்கள் மேலதிக கேள்விகளை கேட்க முற்பட்ட வேளையில் இதற்கு தலமை தாங்கியவர்களால் “நீங்கள் எமது ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக வந்தீர்களா..?”என ஊடகவியலாளர்கள் மீது கேள்விகளை தொடுத்தனர்..இவர்களின் இவ் நடவடிக்கையால் யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்விடத்திற்கு வந்துள்ளதாக இதனை அவதானித்த சிலர் கருத்துக்களை கூறினர்

இதேவேளை இன்று காலை வவுனியா தாலிக்குளம் பகுதியில் கானாமல் ஆக்கப்பட்ட 60குடும்பங்கள் பங்கு கொண்ட மற்றுமொரு நிகழ்வு இடம்பெற்றிருந்தது அவர்களிடம் நாம் தொடர்பை ஏற்படுத்திய வேளை தமக்கு இவ்வார்ப்பாட்டம் பற்றி எந்த தகவலும் அறிவிக்கவில்லை என்றும் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையெனவும் ஒருசிலரின் தனிப்பட்ட சுயலாபத்திற்காக  தமது சங்கத்தினரை வழிநடத்தி இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை  மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர் ஆயினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இவ் குற்றச் சாட்டினை மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இக் கானொளியில் சிங்கள மொழியில் உரையாற்றும் பெண் தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவராகும் எனினும் இன்று ஏன் இவ்விடத்திற்கு கூட்டம் ஒன்று இருப்பதாகவும் தம்மை ஜெயவனிதா என்பவர் அழைத்ததாகவும் குறிப்பிட்ட பெண் தாம் இவ்விடத்திற்கு வந்த்ததிற்கான காரணம் தமக்கு தெரிஜாதெனவும் குறிப்பிட்டார் (இது சம்பந்தமான பல ஆதாரங்கள் ஊடகவியலாளர்களால் அவ்விடத்தில் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்)

எவ்வாறிருப்பினும் ஒரு சிலரின் சுய இலாபத்திற்காக இவ்வாறு சங்கங்க்ளுக்கு இடையில் பிளவை உண்டு பன்னுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு சிலரின் நடவடிக்கையினாலேயே வவுனியா பிரஜைகள் குழு அமைப்பும் இரண்டாக பிளவு பட்டது என்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

15966373_10208036410172691_1063273662_o 15966641_10208036409732680_540732124_o 15967507_10208036408172641_154656711_o 15967640_10208036409372671_811753574_o 15991774_10208036407652628_1392680381_o 15992289_10208036406772606_997302279_o 16010285_10208036407892634_1066909730_o 16010443_10208036405652578_1913465629_o 16010649_10208036408452648_948983581_o

1548 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments