வவுனியா புகையிரத நிலைய வீதியானது கடந்த சில நாட்களாக வீதி விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன

இதேவேளை

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை இவ்வீதியில் பாரிய நீர்ப்பாசண பணியொன்றினை மேற்கொண்டுவருகின்றனர் மேலும்   கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக இவ்வீதியில் வைரவர்புளியங்குளம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக பாரிய குழிகள் வெட்டப்பட்டு குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும் இரண்டு தினங்களாகியும் அப்பாரிய குழிகள் இதுவரையிலும் மூடப்பவில்லை இதனால் அப்பகுதியில் காணப்படும் வர்த்தகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆலாவதாகவும் வியாபாரம் தடைப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்

இது தொடர்பாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ஊடகவியலாளர் தொடர்பு கொண்டுள்ளோம் என அறிவித்தும் அவர் அதை பொருட்படுத்தாத வகையில் தமக்கு இது சம்பந்தமாக பதில் கூற முடியாதென்றும் தமக்கு இப்பொழுது நேரமில்லையெனவும் தெரிவித்தார்

img_4756 img_4757 img_4758 img_4759 img_4760 img_4761 img_4762 img_4763 img_4764 img_4765 img_4766

1337 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments