காஞ்சிபுரத்திலுள்ள சக்திவாய்ந்த காமாட்சியம்மன் கோயிலில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்கின்றனர். உலகத்திலுள்ள பாரம்பரியமான அரிய பொக்கிஷங்களை கண்டறிந்து அதன் பெருமைகளை உலகறியச் செய்யும் உலகளாவிய நிறுவனம் யுனெஸ்கோ ( ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம்) காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இவர்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் காமாட்சியம்மன் கோயிலுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் எனவும் , உலக பாரம்பரியத்தின் இந்திய சின்னமாக அங்கீகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அங்கீகரிக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்குனு கேட்குறீங்களா இத படிங்க

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும்.

“காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி” என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும்.

அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.

தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.

காமாட்சி அம்மன் கோயில் – 1811 ஆம் ஆண்டைய ஓவியம் ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ‘புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும்.

காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்.

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன.இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.

ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது.

நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை.

427 Total Views 2 Views Today
  • 25
  •  
  •  
  •  
  •  
    25
    Shares

Comments

comments