தானே மாவட்டத்தில் 62 வயது நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தானேவை சேர்ந்தவர் சதீஷ் ஆப்தே. வயது 62. இவர் 23 வயது லிசா என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சதீஷ் ஆப்தே பொலிசில் புகார் அளித்துள்ளார். அதில், என் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டார். இதற்கு காரணம் என் மைத்துனி மோனிகாதான்.

ஏனென்றால் அவருக்கும் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் லிசாவின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, சதிஷ், லிசாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார், மேலும் கட்டாயப்படுத்தி தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இதனை சதிஷ் மறுத்துள்ளார். லிசாவுக்கு என் மீது காதல் அதிகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் காதலில் விருப்பமில்லை. அதனால் அவரை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்துகொடுத்துள்ளனர். லிசா இன்னும் என் மனைவிதான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை.

அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

1417 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments