வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இன்று 11-07 தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தின் நிர்வாகிக்கு எதிராக ஊடகங்கள் அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்து ஊடகங்களுக்கு எதிராக ஆரப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகதுறையினருக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அங்கிருந்த பெண்களால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்செயற்பாடு குறித்து விசாரித்தபோது குறித்த நபர் அன்பகம் சிறுவர் இல்ல நிர்வாகியாகிய சாமி அம்மாவுக்கு ஆதரவாக செயற்பட்டுவருவதாகவும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் முயற்சியின் போது குறித்த நபர் மது போதையிலிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

IMG_1674

2356 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments