பிரித்தானியாவின் சோமர்செட் கவுண்டியை சேர்ந்தவர் மிக்கி முர்ரேல்(36), இவரது மனைவி ஆஷ்லே. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சம்பவ தினத்தன்று வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்த கணவன் இரவில் சொகுசு நாற்காலியில் படுத்து உறங்கிய நிலையில் காலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று மிக்கி 16 மணிநேர அலுவலக வேலைகளை முடித்து விட்டு சோர்வாக வந்துள்ளார். இந்நிலையில் ஏன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இப்படி பணியே கதி என இருக்கிறீர்கள் என மிக்கியுடன் அவரது மனைவி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதன்பின்னர், அங்கிருந்த சொகுசு நாற்காலியில் கணவரை உறங்கச் சொல்லிவிட்டு தனது அறைக்கு ஆஷ்லே சென்றுள்ளார். மறுநாள் காலை மிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதை கண்டு ஆஷ்லே கதறி அழுதுள்ளார். தூக்கத்திலேயே மூச்சடைப்பு ஏற்பட்டு மிக்கி உயிரிழந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கணவருடன் இறுதியாக தான் பேசிய போது அது வாக்குவாதமாக ஆனதை நினைத்து ஆஷ்லே தற்போது மனம் வருந்துகிறார்.

வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. அதனால் குடும்பத்தினருடன் ஏதாவது பிரச்சனை என்றால் அதை தீர்த்து விட்டு உறக்கச் செல்லுங்கள் என மற்றவர்களுக்கு ஆஷ்லே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்களுடைய திருமண நாளின் போது, மனைவியை சுற்றுலா அழைத்து செல்வதற்காக மிக்கி அதிக நேரம் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

574 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments