மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி, இவரிடம் திருநங்கைக்குரிய குணங்கள் தெரிந்த காரணத்தால் கும்பத்தார் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். சமூகத்திலும் தொடர்ச்சியாக அவமானங்களை சந்தித்து வந்த இவருக்கு கல்லூரியிலும், அலுவகத்திலும் நிகழ்ந்த அவமானங்கள் ஏராளம்..ஏராளம்.

இதனால் மனமுடைந்த இவர் தெருவில் மற்றவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த இவர், பின்னர் சமூக சேவகராக மாறினார். அதன் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி, எல்ஜிபிடி எனப்படும் மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பு ஒன்றை துவங்கி, இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கி உள்ளார்.

அவருடைய இந்த சமூக பணிகளுக்காக தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் இப்பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

1525 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments