வவுனியாவில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டபோது விபத்து தகவல்கள் முடக்கம்
வவுனியாவில் அரச அதிகாரிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட்ட வாகனம் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் பெண் கணக்காய்வாளர் ஒருவரின் வாகனம் ஒன்று  wp-PA 4891 அரசாங்க அதிபரின் அனுமதியின்றி கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது அத்துடன் அவரது நண்பர் ஒருவருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இதனை வேறு சாரதி ஒருவரே செலுத்தியுள்ளார் இதன்போது குறித்த வாகனம் விபத்தில் சிக்கியதுடன் சாரதி படுகாயமடைந்து இரண்டு வாரங்கள் வைத்தயசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
ஆனால் இத் தகவல்கள் வெளியே வராமல் குறித்த அதிகாரிகளால் திட்டமிட்டவகையில் மூடி மறைக்கப்பட்டு விட்டது தற்போது அரச செலவில் திருத்தி அமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது விபத்தை ஏற்படுத்திய பிறகு அரச செலவில் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதனிடையே கடந்த 03ஆம் திகதி மாகாண கணக்காய்வாளர் பயணித்த வாகனம் ஒன்று மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது விபத்து எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்று தகவல் வழங்கப்படவில்லை மாகாண பணிப்பாளருடன் யார் பயணித்தார்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படவில்லை ஆனால் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பில் அரச செலவில் வாகனத்தை திருத்தவதற்கு  நேற்று 13ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது ஊழில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரச உயர் பதவிகளை வகிக்கின்றவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு தமது தேவைகளுக்காகவும் உறவினர்களின் தேவைகளுக்காகவும் முறைகேடுகளாக பயன்படுத்தப்பட்ட வாகனம் விபத்தில் சிக்சியதும் அதனையும் அரச செலவிலே திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு நேரடியாக அரச நிதிகள் பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நிதி தாபனத்திற்கு பொறுப்பான அலுவலர்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாகனம் திருத்தவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் ஆனால் குறித்த இரண்டு வாகன விபத்துக்களின்போதும் இந்த விடயங்கள் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
இவை சம்பந்தமாக முறைப்பாடு ஒன்றும் வவுனியா மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
12575 Total Views 1 Views Today
  • 626
  •  
  •  
  •  
  •  
    626
    Shares

Comments

comments