வடமாகாண சபையின் உறுப்பினராக கடந்த 2013 தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) சார்பில் போட்டியிட்டு பெருந்தொகையான வாக்குகளை பெற்று வடமாகாணசபைக்கு ரெலோ சார்பில் தெரிவானதுடன் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி, மற்றும் போக்குவரத்து அமைச்சராக முடி சூட்டிக்கொண்டார் திரு டெனீஸ்வரன் அவர்கள்

இதேவேளை கடந்த நாட்களில் வடமாகண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கட்கு எதிராக தமிழரசு கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதராவாக டெனீஸ்வரன் அவர்களும் கையெழுத்திட்டத்திற்கு, எதிராக ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி அமைச்சர் டெனீஸ்வரனுக்கு இதற்கான விளக்கத்தை தருமாறு ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் அவர்களால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது

இதற்கு பதில் கடிதமாக அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் ரெலோ கட்சியினை கொள்கையே இல்லாத கட்சியென எடுத்துக்காட்ட முனைவது போலும் கேலி செய்வது போலும் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை பகிர்கின்றனர்

ஐயா டெனீஸ்வரன் அவர்களே உங்களிடம் பகிரங்கமாக ஓர் கேள்வி

நீங்கள் ரெலோ கட்சியில் இனையும் போதோ அல்லது அதில் தேர்தலில் இறங்கும் போதோ உமக்கு அக்கட்சியின் கொள்கை தெரியாமலா தாங்கள் தேர்தலில் குதித்தீர்கள் அப்படியென்றால் நீங்களே கொள்கை இல்லாத நபர் தானே….????? இவ்வாறு இருக்கும் போது இப்பொழுது நீங்கள் ரெலோ கட்சியின் கொள்கையை கேட்கின்றீர்களே…இதை நீர் சரியென நினைக்கின்றீர்களா? இத்தனை வருடமும் அமைச்சராக இருந்து விட்டு இப்பொழுது கூட தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் கொள்கை தெரியவில்லை என்றால் உங்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதே…!கொள்கையே இல்லாத நீரா உமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய போகிறீர்கள்…..?

வவுனியா

2879 Total Views 2 Views Today
  • 165
  •  
  •  
  •  
  •  
    165
    Shares

Comments

comments