கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இன்று முற்பகல் 11.50 மணியாவில் புறப்பட்ட புகையிரதம் மாங்குளம் புகையிரத நிலையத்தை மாலை ஆறு மணியளவில் கடந்து சென்று கொண்டிருந்த வேளை, முறிகண்டிப் பகுதிக்கு இடையில் குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

குறித்த புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு மாங்குளம் பொலிசாரிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த நபரை தேடும் பணியில் மாங்குளம் பொலிஸ் குழு ஒன்று ஈடுபட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த நபர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

2838 Total Views 2 Views Today