அம்பாறை – கல்முனை பாண்டிருப்பு, பெரியகுளத்தில் மாடு மேய்க்கச் சென்றிருந்த நபர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்..

மாடுகளை மேச்சலுக்காக கொண்டு சென்றிருந்த குறித்த நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

நீண்ட நேரமாக இவரைக் காணாததால் தேடிச்சென்ற சக மேய்ப்பாளர்கள் அவர் உயிரிழந்திருந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, விசாரணைகளின் போது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

303 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments