யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.00 மணி வரை மின்சார விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளின் நிமித்தம் மின் விநியோகம் தடைப்படும் என சபை அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், கைதடி வடமாகாண சபை அலுவலகம், கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம், கைதடி யுனைரட் மோட்டர்ஸ், கைதடி, நுணாவில், நாவற்குழி, மறவன்புலவு, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, அறுகுவெளி ஆகிய இடங்களில் இந்த மின்தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

111 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments