வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புகுழு கூட்டம் ஆரம்பம்.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இன்று 15.07 காலை 10மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராஜா தலைமையில் ஆரம்பமானது.

இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவகக்தி ஆனந்தன் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. கே. மஸ்தான். வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் இணைப்பாளர் முத்து முகமது, வடமாகாண சபை உறுப்பினர்களாக ம.தியாகராசா, ஜெயதிலகா, ஜி.ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், மற்றும் நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன், தமிழ் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி. கிஷோர் சுகந்தி, கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவர் திரு. சுந்திரகுமார், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

1006 Total Views 1 Views Today