ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் குடியேறாதவர்களின் காணிகளை மீட்டு காணி அற்றவர்களுக்கு வழங்கவும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவிப்பு.

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் பல வருடகாலமாக குடியேறாமல் இருக்கும் காணிகளை தெரிவு செய்து காணியற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளரிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் குறித்த ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்டம பகுதியில் பலர் காணியினைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்தபோதும் தற்போது அப்பகுதயில் 45 குடும்பங்களே வசித்து வருவதாக ஓமந்தை கிராம அலுவலகர் திருமதி அ. அனுசியா தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் காணிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அங்கு சென்று குடியேறாமல் அப்பகுதி காடுவளர்ந்து யானைகள், திருடர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இன்று வவுனியா பிரதேச செலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது

1859 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments