புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சாட்சிப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையிலேயே, சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

921 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments