ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் 9 கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள் எனவும் அத்தோடு தமது கூட்டணியில் இருந்தும் விலக உள்ளதாகவும் கூட்டணி கட்சி ஒன்றின் தலைவர் கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதாகவும் தற்போது தமது பிரச்சினைகளை பேசக்கூட அரசாங்கத்தில் வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதம் ஒரு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகள் இடையில் சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஆரம்பத்தில் கூறிய போதிலும் கடந்த ஆறு மாதங்களாக அப்படியான கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை எனவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

438 Total Views 1 Views Today