ராஜஸ்தான், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கலு கான் கி தானி கிராமத்தில் ஓர் சிறுமியை பலவந்தமாக திருமணம் செய்ய முயற்சித்து கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆமத் கான் என்பவர் தன் மகளை (சிறுமி) ஷவ்கத் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த சிறுமியின் தாயார் நெமத் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, ஷவ்கத் மற்றும் அவனது நண்பர் லியாஸ் ஆகியோர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை இழுத்துச் சென்றனர்.

இதை தடுக்க வந்த தாயையும் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலர் இது பாகிஸ்தானில் நடந்தது என வதந்தியை பரப்பி வருகின்றனர். ஆனால் இது இந்தியாவில் நடந்தது என dnaindia பத்திரிகை உறுதி செய்துள்ளது.

சிறுமி கடத்தல்

இந்தியாவில் சினிமா பாணியில் தாயை தாக்கி சிறுமியை கடத்தியவர்கள்..(அதிர்ச்சி வீடியோ)

Posted by தமிழ் தேசிய செய்திகள் -tnnlk.com on Friday, September 29, 2017

555 Total Views 1 Views Today
  • 30
  •  
  •  
  •  
  •  
    30
    Shares

Comments

comments