இந்த உலகம் இன்னும் ஏழு ஆண்டுகளுக்குள் முழுமையாக அழிவடைந்துவிடும் என்று சர்ச்சைக்குரிய விஞ்ஞானியான டேவிட் மேட் என்பவர் எச்சரித்துள்ளார்.அந்த அழிவுக்கான தொடக்க நாளாக எதிர்வரும் பதினைந்தாம் திகதி அமைந்து விளங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இவர் ஏற்கனவே, ”செப்டம்பர் 23 அன்று உலகம் அழிந்துவிடும்” என்று முன்னறிவித்தவர். ஆனால் அது நடக்காவிடிலும் அண்மையில் பாரிய உயிரிழப்புகளைத் தோற்றுவித்த அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த மாதம் பதினைந்தாம் திகதியானது ‘ஏழு ஆண்டுக்கான நாசகார நாளாக தொடங்கும், அது மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டுவரும் கொடுங்காலமாக இருக்கும் என்று அச்சப்படத்தக்க வகையில் மீண்டும் கூறியுள்ளார்.குறித்த ஏழு ஆண்டுகளிலும் அகோரமான பூகம்பங்கள், மோசமான சூறாவளிகள் மற்றும் இராட்சத சுனாமிகள் ஆகியவை கூட்டாக பூமியை அழித்துவிடும் என்று கணித்துள்ள அவர், மீண்டும் மீண்டும் இந்தப் பூமியை இருண்ட கிரகம் எனப்படும் நிபுறு கோள் பின்தொடர்கின்றது என்பதோடு புதிதாக X எனப்படும் கிரகமும் பிந்தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டுமே உலக அழிவுகளை இப்பொழுது தூண்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 அன்று பூமி அழிந்துவிடும் என்று குறிபிட்டிருந்தமையையும் இவரது நிபுறு கிரகம் பற்றியும் நாசா அடியோடு மறுத்துவருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.ஆனாலும் செப்டம்பர் 19ஆம் திகதி அன்று மெக்ஸிக்கோவில் 230 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட கொடூரமான பூகம்பம், அண்மையில் கரீபியன் மற்றும் அமெரிக்காவைச் சுற்றியிருக்கும் பிரதேசங்களில் ஏற்பட்ட கொடூரமான சூறாவளிகள் என்பவற்றை ஆதாரமாக வைத்தே அவர் தனது கருத்தில் உறுதியாகவுள்ளார்.”இந்த ஏழு ஆண்டு அழிவில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நமது எதிரிகளான – ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா இடையேயான அணுவாயுதத் தாக்குதல்களும் உள்ளடங்கும் என்றும் அவர் இங்கே பிணைப்புக் காட்டியுள்ளார்.அதன்படி இம்மாதம் பதினைந்தாம் திகதி முதல் இந்த அழிவு ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

796 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments