டெல்லி : பிரபல டான்சர் மற்றும் ஃபோக் பாடகி ஹர்ஷிதா தஹியா செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் பரிதாபமாக நடுரோட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பல இடங்களில் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தி வரும் இவருக்கு நேற்று பஞ்சாபில் இப்படி ஒரு துயரம் அரங்கேறியுள்ளது. அவரை மர்ம நபர்கள் 8 முறை சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை பஞ்சாப் மாநிலம் பானிபட் பகுதியில் கச்சேரியை முடித்து காரில் டெல்லி திரும்பியுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மடக்கி பிடித்து உள்ளே இருந்த அவரின் தோழி நிஷாவையும், டிரைவர் சஞ்சீவையும் மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

 

19-1508415692-harshita-dahiya-singer344 நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகி - வெளியான அதிர்ச்சி தகவல் 19 1508415692 harshita dahiya singer344

 

 

 

 

 

 

 

 

 

 

 

காருக்கு உள்ளிருந்த ஹர்ஷிதாவை துப்பாக்கியால் 8 முறை தலை, கழுத்து பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர சம்பவம் பலரையும் பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாடகியும் டான்சருமான ஹர்ஷிதா தஹியா அவரது தங்கையின் கணவர் தினேஷ் மாத்தூர் என்பவரால் கொலை செய்யப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷிதாவின் அம்மாவையும் கடந்த 2014-ம் ஆண்டு கொன்றது இவன்தானாம்.

2013-ம் ஆண்டில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹர்ஷிதா தினேஷ் மாத்தூர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஹர்ஷிதாவின் அம்மாவை கொலை செய்த வழக்கில் சாட்சியாக ஹர்ஷிதா இருப்பதால் அவரை தினேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான் தினேஷ் மாத்தூர்.

19-1508415708-harshita-dahiya-singer நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகி - வெளியான அதிர்ச்சி தகவல் 19 1508415708 harshita dahiya singerபாடகி ஹர்ஷிதாவின் தங்கை லதா, தனது அக்காவை கொன்றது தனது கணவர்தான் எனக் கூறியிருக்கிறார். எங்கள் அம்மாவின் கொலை வழக்கில் ஹர்ஷிதா சாட்சியாக இருந்ததால் அவளையும் தீர்த்துக்கட்டிவிட்டார் எனக் கூறியிருக்கிறார் லதா.

193 Total Views 3 Views Today
 • 5
 •  
 •  
 •  
 •  
  5
  Shares

Comments

comments