மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் வவுனியா பொலிஸில் நேற்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் பிரதாபன் (வயது 24) என்பவரே தனது மனைவியாகிய பி.றிமாசா (வயது 18) என்பவரை கண்டுபிடித்து தருமாறு முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சந்திரன் பிரதாபன் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா – பசார் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது அக்கடையின் உரிமையாளரின் மகள் என்னை காதலித்து வந்தார்.

இந்த நிலையில், எங்கள் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து, அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், அவர் என்னிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறும், இல்லாத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் எனது காதலியை அழைத்துக்கொண்டு கண்டிக்குச் சென்று அங்கு பதிவுத்திருமணம் மேற்கொண்டு குடும்பம் நடத்தி வந்தேன்.

மீண்டும் வவுனியாவிற்கு வந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு காதல் மனைவியுடன் வவுனியா கோவில் குளத்தில் உள்ள எனது வீட்டில் வசித்து வந்தேன்.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தங்கள் மத சடங்கின்படி திருமணம் செய்து வைப்பதாக நயவஞ்சகமாக என்னையும், மனைவியையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

எங்களை அடைத்து வைத்ததுடன், என்னை பலமாக தாக்கி கட்டாயப்படுத்தி எனது சம்மதத்திற்கு மாறாக ‘சுன்னத்து’ செய்து பொலிஸ் நிலையத்தில் நான் என் மனைவியை சீதனம் கேட்டு அடிப்பதாக பொய்யான முறைப்பாட்டை கொடுத்து விளக்கமறியலில் வைத்தனர்.

இப்போது பிணையில் வெளியே வந்துள்ளேன். நான் விளக்கமறியல் இருந்த காலப்பகுதிக்குள் எனது மனைவி றிமாசாவை கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளனர்.

இதன் காரணமாக நான் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே எனது மனைவியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி-தமிழ் வின்

18581 Total Views 23 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments