வவுனியாவில் பள்ளிவசாலை அண்மித்த சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி போராட்டம்

 

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று 31 காலை 10.30மணியளவில் வவுனியா இளைஞர்கள் ஒன்றினைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

 

இன்று காலை நகரபள்ளி வாசலுக்கு முன்பாக ஒன்றினைந்த இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான தமது போராட்டமே இது இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்துவத எமது நோக்கமல்ல இதை தவறாக பரிந்துகொள்ளவேண்டாம். கடந்த 1995ஆம் ஆண்டு 16வியாபார நிலையங்களுக்கு அப்பகுதியில் அனுமதி வங்கப்பட்டுள்ளது எனினும் தற்போது 80ற்கும் அதிகமாக வியாபார நிலையங்கள் சட்டவிரோதமான முறையில் நடைபாதையிலும் பள்ளியை அண்மித்த பகுதியிலும்; அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையில் முன்னர் ஆட்சிபுரிந்த அரசியல் பிரமுகர்கள் இதற்கு அனுமதியளித்துள்ளனர்.  இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் குறிப்பாக வீதி அதிகாரசபையிடம் வினவியபோது அரசியல் தலையீடு காரணமாக முன்னர் அவற்றை அகற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோருவதுடன் அகற்றும் வரை எமது போராட்டத்தினை தொடருவோம் என்றும் இன்று போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா நகரசபைச் செயலாளர் திரு. ஆர். தயாபரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இச்சம்பவம் வீதி அபிவிருத்த அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாhர சபையிடமே உள்ளதாகவும் இதுவிடயமாக தலையிடவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை ஆனால் இன்று இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக வீதி அதிகாரசபையினருக்கும் சகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும்  கடிதம் ஒன்றினை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தார் இதையடுத்து போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் நகரசபை செயலாளருக்கு சட்டவிரோமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களின் வரைபடம், வழங்கப்பட்ட கடைகளின் விபரங்களை தற்போது உள்ள கடைகளின் விபரங்களையும் ஒன்றினைத்து மகஜராக கையளித்துள்ளனர்.

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக சட்டவிரோத கட்டிடத்தை அகற்றுமாறு இளைஞர்களின் கண்டன நடவடிக்கை

Posted by Parameswaran Kartheeban on Monday, October 30, 2017

 

435 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments