அரபு நாடுகளில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவது இல்லை.

இந்நிலையில் தங்களது ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதித்து இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சவுதி அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் தலையிட்டு தண்டனைச் செயல்படுத்த படுவதைத் தடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.

ஃபாத்திமா அல் குவைனியின் பிறந்தநாளை அவரது தோழிகள் மூன்று ஆண் நண்பர்களுடன் இனைந்து ஃபாத்திமாவின் வீட்டில் கொண்டாடி உள்ளனர்.

இது குறித்து ஃபாத்திமாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சவுதி அரேபியாவின் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் அங்கு வந்த போது தங்களது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இவர்கள் நடனமாடிக் கொண்டிருந்துள்ளனர். உடனடியாக அனைவரையும் கைது செய்த காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் பெண்கள் தங்களது தவறை ஒப்புக்கொள்ளாததால் மரண தண்டனையை நிறைவேற்ற “ஆண்கள் மட்டும்” ஷரியா குழு தீர்ப்பு வழங்கியது.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று ஆண் நண்பர்களுக்கும் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் வழங்கி விடுதலை செய்துள்ளது அந்தக் குழு.

மிக மோசமான மனித உரிமை மீறலான இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையும், பெண்கள் உரிமை ஆணைக்குழுவும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா கடுமையான இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் ஒரு நாடு.

மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நபரின் தலையை மக்கள் பார்க்கும் வகையில் பொது இடத்தில் வெட்டுவதே அந்த நாட்டின் வழக்கம். தலை வெட்டப்பட்ட சடலத்தை ஊரின் மத்தியில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தவும் செய்வர்.

2755 Total Views 3 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments