கனடாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம் பெருந்தொகை கனேடிய டொலர்களை இலங்கை ஈட்டியுள்ளது.

கனேடியே தலைநகர் ஒட்டாவில் நடத்தப்பட்ட கண்காட்சியின் மூலம் இரு நாட்களில் இரு நாட்களில் 34200 கனேடிய டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது.

கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட 29வது சர்வதேச சுற்றுலா மற்றும் போக்குவரத்து கண்காட்சியிலே இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளது.இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் இலங்கை தேயிலை வாரியகத்தின் பங்களிப்புடன் Montreal பகுதியில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி கடந்த 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரையில் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பிலான கண்காட்சியை 34200 பேர் பார்வையிட்டுள்ளனர்.இலங்கை கண்காட்சியை பார்வையிட வந்த அனைவருக்கும், இலங்கை வரைப்படம், பிரான்ஸ் மற்றும் ஆங்கில சுற்றுலா பத்திரங்கள் மற்றும் இலங்கை தேயிலை மாதிரிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்கள், பாரம்பரிய கலாச்சாரங்கள், நிலப்பரப்பு இயற்கை அழகுகள், வனவிலங்கு மற்றும் இலங்கை தேயிலை காண்பிக்கப்பட்டுள்ளது.சிறிய நாடு ஒன்றிலுள்ள சுற்றுலா அனுபவங்களை பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான விழிப்புணர்வு இதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடிந்ததாக கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அழகை பார்த்து ஆச்சரியமடைந்த வெளிநாட்டவர்கள் அடுத்த சுற்றுலா விடுமுறைகளை கழிப்பதற்கு இலங்கையை தெரிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டில் இலங்கை வந்த கனேடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டியிருந்தது. 2015ம் ஆண்டை விட இது 29 சதவீத அதிகரிப்பாகும்.

304 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments