சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக்கோட்டையாக இருந்த தேர் அசோர் நகரை ரஸ்யாவின் கடுமையான தாக்குதல் உதவியுடன் சிரியத்துருப்புகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.

வான்வழிகுண்டு வீச்சுகள் கடற்கலங்கள் மற்றும் ரஸ்ய நீர்மூழ்கிக்லத்திலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத்தாக்குதல்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐ.எஸ் இன் பயங்கரவாத பிடியில் இருந்து மேற்படி நகர் மீட்கப்பட்டிருப்பதாக சிரிய அரச தொலைக்காட்சியும் அறிவித்துள்ளது.ஐ.எஸ் அமைப்பின் பிடியில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கட்டுப்பாட்டில் ரக்கா நகருக்கும் ஈராக்கிய எல்லைக்கும் இடையே தேர்அசோர் நகரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஈராக்கிய ராணுவமும் தமது தரப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய நகர் ஒன்றை நெருங்கிவருகிறது.

446 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments