கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 49 வயதான லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் பலியாகி உள்ளார். இவர் புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரொரன்டோ பகுதியிலுள்ள ஜோர்க் பல்கலைக்கழகத்திற்கு பக்கத்தில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் கலைச்செல்வி உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்தவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1048 Total Views 6 Views Today
  • 56
  •  
  •  
  •  
  •  
    56
    Shares

Comments

comments