அட்லீ-விஜய்யின் இரண்டாவது கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். படத்தின் ரிலீசுக்கு பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற தவறவில்லை.

இந்த நிலையில் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனைகள் செய்துள்ளது. இதோ அந்த விவரம்

2017ம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக ஓபனிங் கொண்ட படம் விஜய்யின் மெர்சல். உலகம் முழுவதும் 3,200 திரையரங்குகளில் வெளியான இப்படம் விநியோகஸ்தர்கள் ஷேர் சேர்ந்து முதல்நாள் ரூ. 24 கோடி வரை வசூலித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களில் ரஜினியின் கபாலி ரூ. 21.5 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது. அந்த வசூல் சாதனையை விஜய்யின் மெர்சல் ரூ. 22 கோடி வசூலித்து ரஜினி பட சாதனையை முறியடித்தது.

மெர்சல் விஜய்யின் படங்களில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் படம். கோலிவுட்டில் 200 கோடி பட வரிசையில் ரஜினியின் எந்திரன், கபாலி, கமல்ஹாசனின் விஸ்வரூபம், விக்ரமின் ஐ படங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது மெர்சல்.

ரூ. 210 கோடி உலகம் முழுவதும் வசூலித்த இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படம். இன்னும் 30 கோடி வசூலித்தால் மெர்சல் விக்ரமின் ஐ (ரூ. 240 கோடி) பட சாதனையை முறியடிக்கும்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களில் மெர்சல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

168 Total Views 3 Views Today
  • 11
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

Comments

comments