வவுனியா வைரவர்புளியங்குளம் குளக்கட்டு வீதியானது பல நாட்களாக புணரமைக்கப்படாமல்  காணப்பட்டது

எனினும் கடந்த சில காலமாக இவ்வீதியானது புனரமைக்கப்பட்டு வருகிறது

மேலும் மக்களின் வரி பணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்(வீதி அபிவிருத்திக்கென) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் இவ்வீதி புனரமைப்புக்கென 1கோடி ருபாய்க்கு மேல் பாரிய நிதி ஒதுக்கப்பட்டிருந்தது

இதனை வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை பொருப்பெடுத்து மேற்கொண்டு வந்துள்ளது வவுனியா வைரவர்புளியங்குளம் ஆதி விநாயகர் கோவில் சந்தியிலிருந்து குளக்கட்டு வீதியூடாக 1கிலோ மீற்றர் தூரத்திற்கு (மாட சாமி கோவில் வரை) வீதி புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியில் முற்று முழுதாக வீதி புனரமைப்பு பணி இடம்பெறவில்லை

குளக்கட்டு வீதியின் குளக்கட்டு முடிவடையும் வரையில் மட்டுமே புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன

இதேவேளை குறித்த குளக்கட்டின் இடையில் குறுக்கே காணப்படும் குறுக்கு வீதி ஒன்று இதே நிதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

குறித்த குறுக்கு வீதியானது பொறியியலாளர் ஒருவரது வீட்டிற்கு செல்லும் பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே

1) 1கிலோ மீற்றர் நீளத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்ட நிதி எவ்வாறு குறுக்கு வீதிக்கு பாவிக்கப்பட்டது..?

2) இதனை யார் மதிப்பீடு செய்தது..?

3) யார் ஒப்பந்த காரர்..? ஒப்பந்தகாரருக்கு வழங்கப்படும் ஒப்பந்தம் சரியான முறையில் பகிரங்கப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டதா..?

4) வீதி புனரமைப்புக்கான மூலப் பொருட்கள் சரியான முறையில் பரிசோதனை செய்யப்பட்டதா..? 

5) குறித்த வீதி புனரமைப்பை பாராளுமன்ற உறுப்பினரால் சரியான முறையில் மேற்பார்வை செய்யப்பட்டதா..?

6) இவ்வீதியின் குறுக்கே காணப்படும் கமநல சேவைகளுக்கு சொந்தமான நீர் பாயும் பாலம் அவர்கள் புனரமைப்பதானால் வீதியின் முழு நீள அளவு சரியாக 1கிலோ மீற்றர் என்பது மாடசாமி கோவில் வரை தான் காணப்படுகிறதா..?

7) வீதியின் ஒப்பந்த காரர் விபரம் அல்லது ஒதுக்கப்பட்ட நிதியின் தொகை மக்களின் பார்வைக்கு வீதியில் ஏன் காட்சி படுத்தவில்லை..?

இவ்வாறான பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்பட்டுவருகிறது மக்களின் வரிப்பணத்தில் மோசடி செய்யும் அரச அதிகாரிகளே உங்களின் இந்த மோசடி வெளிச்சத்திற்கு ஆதார பூர்வமாக புகைப்படங்களுடன் பதிவேற்றப்படும்

இது சம்பந்தமான எமது செய்தியின் பிரதிபலிப்பு பல உண்மைகள் அம்பலம் காண்பதற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

எமது செய்தியின் பிரதிபலிப்பு வவுனியா குளக்கட்டு வீதி புனரமைப்பில் அதிரடி மாற்றம்..-அம்பலமான உண்மைகள்!

 

12353 Total Views 3 Views Today
  • 414
  •  
  •  
  •  
  •  
    414
    Shares

Comments

comments