வவுனியா வைரவர்புளியங்குளம் குளக்கட்டு வீதி புனரமைப்பு பணியில் பாரிய மோசடி என பதிவேற்றப்பட்ட எமது செய்தியினை தொடர்ந்து எமது செய்தி பிரிவினர் வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் ,நிறைவேற்று பொறியியலாளர் வவுனியா ,மற்றும் பிரதம பொறியியலாளர் வவுனியா ஆகியோரை சந்தித்திருந்தனர்

அதன்போது குறித்த வீதியின் புனரமைப்பு பணியில் ஏற்பட்டுள்ள மோசடி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது இதில் அவர்கள் எமக்களித்த பதில் குறிப்பிட்ட வீதி பாராளுமன்ற உருப்பினர் ஒருவரின் கீழே நிதி ஒதுக்கிட்டு அவரால் காட்டப்பட்ட வீதியே புனரமைக்கப்பட்டு வருகிறது எனினும் வீதி புனரமைப்பிற்கான மூலப்பொருட்கள் தம்மால் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் தமக்கு எதுவிதமான முன்னறிவித்தலும் வழங்காமலேயே ஒப்பந்த காரரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் ஒத்துக்கொண்டுள்ளனர்

எனவே உடனடியாக புனரமைப்பு பணியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அமைக்கப்பட்ட வீதியை முற்றிலுமாக நீக்கி மீண்டும் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின் மீள் அமைப்பதற்கும் தாம் உத்தரவிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது

எனினும் எதற்காக குறுக்கு வீதி போடப்பட்டுள்ளது என அதற்குறிய காரணம் என்ன ? என வினாவிய போது

அது சம்பந்தமாக தமக்கு தெரியாது எனவும் ஆனாலும் ஒப்பந்த தொகை வழங்கும் போது சரியாக பரிசீலித்தே நாம் பணம் வழங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார்

இதேவேளை எம்மை தொடர்பு கொண்ட குறிப்பிட்ட குறுக்கு வீதியில் வசிக்கும் பொறியியலாளர் தாம் அந்த வீதிக்குறிய பணத்தை மீள் அளிப்பதாகவும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

எது எவ்வாறிருப்பினும் இவ்வீதியில் மோசடி நிகழ்ந்திருப்பது அம்பலமாகியுள்ளதுடன் எமது செய்திப்பிரிவால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

எம்மக்களின் வரிப்பணத்தில் விளையாடும் அனைவரும் எம்மால் அவதானிக்கப்பட்டுகொண்டே இருக்கிறீர்கள் என்பதையும் அறியத்தருகிறோம்..!

இது சம்பந்தமான எமது முன்னைய செய்தியை காண்பதற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

வவுனியா வைரவர்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் பாரிய மோசடியா..?அதிர்ச்சி தகவல்!

 

6654 Total Views 3 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments