ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தினுள் திருடர்கள் கைவரிசை

வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தின் மகாகணபதி கிளையினை நேற்றிரவு (12.11.2017) உடைத்து திருடப்பட்டுள்ளது. இச் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நால்வரை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் விஜயரத்ன அவர்களின் தலமையிலான பொலிஸ் கொஸ்தபர்களான சந்திரவன்ச (74660) , செனரத்ன (56557) , உபுல் (34911) ஆகியோரினால் ஈச்சங்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்ததுடன் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியினையும், திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ப.நோ.கூ சங்கத்தின் பின் யன்னல் கதவினையுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒன்டரைலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் 16,000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிருந்து தெரிய வருகின்றது. எனவும் கைது செய்யப்பட்டபவர்கள் 19,20,25,27 வயதுடைய இளைஞர்கள் எனவும் இவர்கள் வவுனியா முருகனூர், முல்லைத்தீவு, ஒமந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

இச் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா குற்றத்தடவியல் பொலிஸாருடன் இணைந்து ஈச்சங்குளம் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

637 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments