வவுனியாவில் இன்று மட்டும் 92கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது மூவர் கைது

வவுனியாவில் இன்று (12.11) காலை முதல் பிற்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இருவேறு பகுதிகளில் 92 கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 5.30மணியளவில் கனகராஜன்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட போது கனகராஜன்குளம் பகுதியிலில் வைத்து ரோசா பஸ்சில் கொண்டுவரப்பட்ட 90 கிலோ கேளரா கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதுடன் வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இராஜேந்திரன் சிவகுமார் வயது 34, இராஜேந்திரன் ஜெயதாஸ் 36 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளதாக கனகராஜன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று காலை 9.30மணியளவில் புளியங்குளம் பகுதியில் பேருந்தில் 2கிலோ கஞ்சாவுடன் இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று வவுனியாவில் கைப்பற்றப்பட்ட 92கிலோ கஞ்சாவினையும் சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

863 Total Views 3 Views Today
  • 67
  •  
  •  
  •  
  •  
    67
    Shares

Comments

comments